பக்கங்கள்

Wednesday, June 22, 2011

இலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது: செந்தமிழன் சீமான்

சென்னை நந்தம்பாக்கத்தில் தொழில், வணிக கண்காட்சிகள் நடத்தப்படும் சென்னை வர்த்தக மையத்தில் வரும் 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி (21st Edition of India’s Premier Exhibition on Interior Design, Furniture, Furnishing and Décor Accessories) நடைபெறவுள்ளது. ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எனும் நிறுவனம் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.

21வது ஆண்டாக நடைபெறும் இந்த பன்னாட்டு கண்காட்சியில்  கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என்று கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் விநியோகித்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போரில் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்று குவித்த அந்நாட்டு அரசுத் தலைவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை அளிக்க மறுத்து வரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழ் மண்ணில் நடைபெறும் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை அனுமதிப்பது என்பது தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாகும்.

எனவே, சென்னை கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் இலங்கையில் இருந்து வரும் எந்த நிறுவனத்தையும் சென்னைக் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தயாரிக்கப்பட்ட எந்த பொருட்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறச்செய்யவும் அனுமதிக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

எங்களின் வேண்டுகோளையும் மீறி, இக்கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களோ அல்லது பொருட்களோ பங்கு பெற அனுமதிக்கப்பட்டால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.
உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..
என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?
1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.
அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’
சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..
நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.
பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.
நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’
அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?
இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.
மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.
வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.
என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.
அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’
சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?
அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.
நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’
சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?
ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.
சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.
மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.
அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.
அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.
இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.
தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.
ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.
ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?
அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.
சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.
சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.
என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!
நன்றி – சூரியகதிர்

Thursday, June 9, 2011

இலங்கை விவகாரத்தில் நாடகமாடினார் கருணாநிதி ஜெயலலிதா காட்டம்

சட்டப் பேரவையில் நேற்று நிறைவேற்றப் பட்ட தீர்மானம்
“தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல.  யாரையும் தாழ்த்துவதல்ல” என்றார் பேரறிஞர் அண்ணா.  இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள்கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர்.  இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தேவையான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.
1. பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது;
2. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது;
3. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது;
4. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக் கூடியவர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது  மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது;
5. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது,
போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றசாட்டுக்களை உள்நாட்டுப் போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.
எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.”
இந்தத் தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசிய பிறகு இது பற்றிய எனது கருத்துக்களை மேலும் எடுத்துரைக்கிறேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
******
இந்தத் தீர்மானத்திற்கு செல்வி.ஜெயலலிதாவின் பதிலுரை

இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் “சுயாட்சி அந்தஸ்து”,  “தனி ஈழம்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின.  இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.
1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.  இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு திரு. மு. கருணாநிதி தலைமை வகித்தார்.  மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.
2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.
இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது.   இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை  மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன்.  ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்”; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனிதச் சங்கிலி போராட்டம்” “பிரதமருக்கு தந்தி”; “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு”; “ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது”; “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு” என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் நடத்தப்பட்டன.
இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று “போர் நிறுத்தம் ஏற்படும்  வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி.  மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் “உண்ணாவிரதம்” என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.
“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர்.  இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள்  இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.  ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, “இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்” என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது.  உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதி.  "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு “தமிழினப் படுகொலை”-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது” என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.
இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல.  அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்;  மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. 
இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  இங்கே பேசிய மாண்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு. சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார்.  இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார்.  இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை.  அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை.  அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான்.  இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான்.  இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும்.  வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.
இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில மாண்புமிகு உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள்.  அப்படியில்லை.  ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.  அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.  அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.
எனவே, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக்கமின்றி பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழக முதல்வரின் முழுப் பேச்சு விவரம்

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது முதல்வர் ஜெயலலிதா அவையில் பேசியதாவது:

இலங்கை நாட்டிற்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர்.

இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் “சுயாட்சி அந்தஸ்து”, “தனி ஈழம்” உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அதிமுக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின. இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.

1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக திரு. மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு திரு. மு. கருணாநிதி தலைமை வகித்தார். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த திரு. கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.

இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன்.

ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, “அனைத்துக் கட்சிக் கூட்டம்”, “சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்”; “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்”, “மனிதச் சங்கிலி போராட்டம்” “பிரதமருக்கு தந்தி”; “நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு”; “ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது”; “இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு” என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியால் நடத்தப்பட்டன.

இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்” என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி.
மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது” என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் “உண்ணாவிரதம்” என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.

“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, “இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்” என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

“போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது” என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. “தமிழினப் பாதுகாவலர்” என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு “தமிழினப் படுகொலை”-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது “உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது” என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இங்கே பேசிய மாண்புமிகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு. சௌந்தரராஜன் அவர்கள், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான்.

இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில மாண்புமிகு உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் திரு. பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார். அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை – ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.
அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Tuesday, May 24, 2011

கிரிமினல் வழக்கில் பெண் என்பதற்காக சலுகை எதிர்ப்பார்க்கக் கூடாது - கனிமொழி பற்றி ஜெயலலிதா

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா, கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள், பெண் என்பதற்காக சலுகை எதையும் எதிர்ப்பார்க்கக் கூடாது என்றும், அரசியலிலும் பெண் என்பதற்காக சலுகைகளை எதிர்ப்பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.
 ராஜீவ் காந்தி.   இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது.  இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ?

மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ?   இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. இந்த புத்தகத்தை எழுதியவர், ராஜீவ் சர்மா என்ற டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்.  கடும் உழைப்பைச் செலவிட்டு, மென் பொறியாளரான அன்புத் தோழர் ஆனந்தராஜ், இதை மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்தப் புத்தககத்தை சவுக்கு பதிப்பகம் சார்பாக முதல் நூலாக வெளிக் கொணர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
 Wrapper_Final
வரும் ஜுன் 4, சனிக்கிழமை அன்று, வெங்கட்நாராயணா சாலை, தியாகராய நகரில் உள்ள செ.நாயகம் தியாகராயர் மேல்நிலைப் பள்ளியில் மாலை 5 மணிக்கு இந்நூல் வெளியிடப் படுகிறது.

Wednesday, May 11, 2011

 
Hóð£èó¬ù ðòƒèóõ£Fò£è CˆîKˆî Þñ£‹ ꋲb¡ è£CI‚°
      îI›„êÍèƒèO¡ Æì¬ñŠ¹ è´‹ è‡ìù‹
    åê£ñ£ H¡«ôì¡ ñ¬øMŸ° üù£û£ â¡Â‹ CøŠ¹ˆ ªî£¿¬è ïìˆFò ñ‚è£ ñvTˆ Þ²ô£Iò ¬ñòˆF¡ î¬ôõ˜ Þñ£‹ ꋲb¡ è£CI Hóð£èó¬ù»‹, H¡«ôì¬ù»‹ åŠH†´Š «ðCò îI›„ êÍèƒèO¡ Æì¬ñŠ¹ è´‹ è‡ìù‹ ªîKMˆ¶œ÷¶. Þ¶°Pˆ¶ Ü‰î‚ Ã†ì¬ñŠH¡ 弃A¬íŠð£÷˜ F¼ °.ªê‰F™ñœ÷˜ «ð²¬èJ™...
     å¼ M´î¬ôŠ «ð£ó£†ì ió¬ó, å¼ «îCò Þù M´î¬ô‚è£èŠ «ð£ó£®ò îIjöˆF¡ «îCòˆ î¬ôõ˜ «ñî° Hóð£èó¡ Üõ˜è¬÷ ðòƒèóõ£F âù CˆîK‚è ºò¡ø Cƒè÷‚ ¬è‚ÃL ꋲb¡ è£CI¬ò õ¡¬ñò£è‚ 臮‚A«ø£‹. ò£¬ó ò£«ó£´ åŠH†´Š «ð²õ¶? Hóð£èó‹, H¡«ôì‹ å¡ø£? îIjö ñ‡E™ îI›Š «ðóó¬ê à¼õ£‚A 30 ݇´è÷£è ï™ô£†C ïìˆFòõ˜ Hóð£èó¡. M´î¬ôŠ ¹Lèœ Þò‚è‹ î£ƒèœ º¡ªù´ˆî M´î¬ôŠ «ð£K™ ÜŠð£M Cƒè÷ ñ‚èœ å¼õ¬ó‚ Ãì ªè£¡øF™¬ô. àôA«ô«ò H„¬ê‚è£ó˜èœ Þ™ô£î  îIjö‹; Mð„ê£ó‹ Þ™ô£î  îIjö‹; ê£ó£ò‹ Þ™ô£î  îIjö‹; ê£ó£ò‹ °®‚è£î 忂躋 膴Šð£´‹ ªè£‡ì Þó£µõ‹ ¹Lèœ Þó£µõ‹; Þˆî¬èò ªð¼¬ñ‚°‹, àôèŠ ¹è¿‚°‹ àKòõ˜ «ñî° Hóð£èó¡ Üõ˜èœ, ÜŠð£M ñ‚èœ Ã´A¡ø ªð£¶ÞìƒèO™ °‡´ ¬õ‚Aø ñQî °ôˆFŸ° âFó£ù W›¬ñò£ù «õ¬ôè¬÷„ ªêŒò‚îòõ˜èœ Ü™ô˜ ¹Lèœ. Þó£Yšè£‰F¬ò ¹Lèœ ªè£¡ÁM†ì£˜èœ â¡Á ÃÁAøõ˜èœ, Þó£Yšè£‰F ã¡ ªè£™ôŠð†ì£˜ â¡Á C‰F‚è ñÁ‚Aø êÍè M«ó£Fè÷£è«õ àœ÷ù˜.
     ‘Þ‰Fò£M¡ º¡ù£œ Hóîñ˜ Þó£Yšè£‰F ñóíˆF™ °Ÿø‹ ꣆ìŠð†ì Hóð£èó‚«è ºî™õ˜ è¼í£GF Þóƒè™ ªêŒF õ£C‚°‹«ð£¶ ï£ƒèœ åê£ñ£ H¡«ôì‚° õ£C‚è‚Ãì£î£-? ( °ºî‹ KŠ«ð£˜†ì˜ 15&5&2011, ð‚è‹ 45 )â¡Á Þñ£‹ ꋲb¡ è£CI ÃPJ¼Šð¶ ÜõK¡ ÜPM¡¬ñ¬ò»‹, Ü«ò£‚Aòˆîùˆ¬î»‹ ªõOŠð´ˆ¶õî£è«õ àœ÷¶. Hóð£èó¡ Þø‰¶M†ìî£è â‰îˆ îIö‹ ï‹ðM™¬ô, Üõ¼‚è£èˆ îIöèˆF™ âõ¼‹ Þóƒè™ ªêŒF õ£C‚辋 Þ™¬ô. ꋲb¡ è£CI å¼ îIöù£èŠ Hø‰¶ Þ¼‰î£™ ÞŠð® è‡Í®ˆîùñ£èŠ «ðCJ¼‚è ñ£†ì£˜. îIöèˆF™ õ£¿A¡ø Þ²ô£Iò˜èO™ 70 M¿‚裆®ù˜ îIö˜èœ Üõ˜èO¡ ªñ£N îI«ö; Üõ˜èœ îI›„ ê£FèOL¼‰¶ îƒè¬÷ ñî‹ ñ£ŸP‚ªè£‡ìõ˜èœ. Ýù£™ 30 M¿‚裴 àœ÷ ༶ Þvô£Iò˜èO¡ HóFGFè«÷ îINùˆFŸ° âFó£è„ ªêò™ð†´ õ¼A¡øù˜.îI› ñ‡E™ õ£›‰¶ ªè£‡´ îINùˆFŸ° âFó£è «ðCõ¼‹ îINù M«ó£F ༶ ºvL‹ ꋲb¡ è£CI «ð£¡øõ˜è¬÷ îI› Þ²ô£Iò àø¾ ªï…êƒèœ Þù‹ 致 ¹ø‰îœ÷«õ‡´‹.
     îIjöˆF™ å¼Cô ༶ ºvL‹è¬÷‚ ªè£‡«ì ªð¼‹ð£ô£ù îI› Þ²ô£Iò˜è¬÷ Cƒè÷õ˜èœ ßö M´î¬ôŠ«ð£ó£†ìˆFŸ° âFó£è ñ£ŸPù£˜èœ. Üî¡ ªî£ì˜„Cò£è Cƒè÷ˆF¡ â´H®ò£è„ ªêò™ð†´õ¼‹ ꋲb¡ è£CI Þƒ«è»‹ ܶ«ð£¡ø WöÁŠ¹ «õ¬ôè¬÷„ ªêŒ¶ îI›„ êÍèƒèOìI¼‰¶ îI› Þ²ô£Iò˜è¬÷ HKˆî£÷ ºò™Aø£˜.ÜõK¡ «ò£‚AòñŸøˆîù‹ i›ˆîŠðì «õ‡´‹. Þ¶«ð£¡ø «ð£‚°‚è¬÷ Þñ£‹ ꋲb¡ è£CI Þˆ«î£´ G¸ˆF‚ªè£œ÷ «õ‡´‹ âù â„êKˆî£˜. 

Monday, May 2, 2011

தமிழினத் துரோகிகள்..! தினமணி தலையங்கம்

இலங்கை அரசு திட்டமிட்டு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்று 2009-ல் எல்லோரும் கூறியதைத்தான் இப்போது ஐக்கிய நாடுகள் குழு அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்போது, இந்தியா எப்படி, இந்த இனப்படுகொலை குறித்து எல்லோரும் குரல் எழுப்பியபோதும் அமைதி காத்ததோ, அதே அமைதியை இப்போதும் கையாள்கிறது.

இலங்கை அதிபர் ராஜபட்ச ஒரு போர்க் குற்றவாளி என்று தண்டிக்கப்படுவதற்கான அனைத்துக் காரணிகளும் இந்த அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை அரசு இதுபற்றித் துளியும் கவலை கொள்ளவில்லை. மாறாக, முழு அறிக்கையை வெளியிட்டால் இலங்கையில் நடைபெற்றுவரும் தமிழர்களின் இணக்கமான வாழ்க்கைக்கான அரசின் முயற்சிகள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

நம் ஒற்றுமையைக் காட்டும் விதமாக மே முதல் தேதி ஐ.நா. அறிக்கைக்கு எதிரான விளக்கம் தருவதாக மே தின ஊர்வலம் அமையட்டும் என்று அறைகூவல் விடுகிறார் அதிபர் ராஜபட்ச. இந்த அளவுக்கு இலங்கை எனும் சிறிய நாட்டுக்குத் தைரியம் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்தியா தரும் துணிவும், ஆதரவும்தான் என்றால் மிகையில்லை. துணையோடு அல்லது நெடுவழி போகேல் என்கிறது நீதிநூல். ராஜபட்சவின் வழித்துணை இந்தியா.

இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் ஜெனீவா மாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்தால் அதை எதிர்ப்பதும், சர்வதேச நிதியத்தில் நிதிபெற்றுத் தருவதும் என எப்போதும் அன்பு காட்டி ஆதரவு தந்துகொண்டிருப்பது இந்தியாதான்.

இலங்கை நடத்திய தாக்குதல், போர்ப்பயிற்சி, ஆயுத சப்ளை, கண்ணிவெடி அகற்றம் என எல்லாவற்றிலும் இந்திய அரசின் நேரடியான - மறைமுகமான உதவிகள் இருந்துள்ளது என்கிற குற்றச்சாட்டுகள் மறுக்கப்படவே இல்லை.

இந்த ஆதரவு தரும் மனவலிமையால், இப்போதும் எங்களை ஐ.நா. ஒரு போர்க் குற்றவாளியாகச் சித்திரிக்குமானால், இந்தியா தடுத்துக் காப்பாற்றும் என்று வெளிப்படையாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள் என்றால், இந்தியா குறித்து அவர்களது மதிப்பீடு என்னவாக இருக்கிறது என்பது வெளிப்படை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தாற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இடம்பெற்றிருக்கிறது. உறுப்பு நாடுகள் கேட்டுக்கொண்டால்தான், இலங்கையில் நடந்த மனிதஉரிமை மீறல் மற்றும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் என்கிறார் ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ மூன். இந்தியாவோ மெüனம் காக்கிறது. இந்திய அரசின் சார்பில் ஐ.நா. குழுவின் அறிக்கை பற்றி அதிகாரப்பூர்வமான கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிறார். தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என்று காங்கிரஸ் தவிர, ஏனைய கட்சிகள் அனைத்துமே ஐ.நா. குழுவின் அறிக்கையின்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பி இருக்கின்றன.

ஆனால், மத்திய அரசில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் தி.மு.க.வின் உயர்நிலைக் குழு கூடியது. விவாதித்தது. தமிழினத்தின்மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையை எதிர்த்துச் சிலிர்த்தெழ வேண்டிய இயக்கம், தயக்கத்துடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது.

""(ஐ.நா. குழு) விசாரணை இன்னும் அதிகாரப்பூர்வமாக, முழுமையாக வெளியிடப்படவில்லை. நமது இந்திய அரசு இந்த அறிக்கை மீது எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற விவரமும் வரவில்லை'' என்று அதற்குக் காரணம் கூறியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

இலங்கைத் தமிழருக்காக இவர் நடத்திய 2 மணி நேர உண்ணாவிரதத்தை ஜெயலலிதா கபடநாடகம் என்று சொன்னதைத் தமிழருக்கு நினைவூட்டத் தவறாத முதல்வர், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ""இப்போதாகிலும் செயல்படுங்கள்'' என்று நினைவூட்டினாரா என்றால் இல்லை. பிரதமரிடமும் சோனியாவிடம் நினைவூட்டுவதற்குத் தமிழினத்தைப் பாதிக்கும், தமிழனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டும் ஐ.நா. குழு விசாரணையைவிடத் தனது குடும்பத்தினரைப் பாதிக்கக்கூடிய முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருவதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

இந்திய அரசும், தன்னைத் தமிழினத் தலைவர் என்று அழைத்துப் பெருமை தட்டிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதி கூறுவதைப்போல, இன்னும் அறிக்கை முழுமையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்று சொல்லக்கூடும். அதைவிட ஒருபடி மேலேபோய், போர்க் குற்றங்களில் விடுதலைப் புலிகளும் ஈடுபட்டனர், மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினர் என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, நடுநிலை வகிப்பதற்குக் காரணம் தேடக்கூடும்.

இந்த வாதங்களை இந்திய அரசு முன்வைக்கும்போது அதை மறுக்கவோ எதிர்க்கவோ துணிவில்லாத கூட்டணிக் கட்சியாக, தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும், தமிழர்களும் இந்தியர்கள்தான் என்றும் தமிழர் நலனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே இந்தியாவின் ஒற்றுமையைப் பாதுகாக்க முடியும் என்றும் மத்திய அரசுக்கு உணர்த்தும் கட்சியாக இன்றைய தி.மு.க. தலைமை இல்லை என்பதுதான் தமிழினத்துக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

தமிழர் குரல் தில்லியில் ஒலியிழந்து போனதற்குக் காரணம் தமிழினத்துக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் தங்கள் சுயநலத்துக்காகக் கைகட்டி, வாய்பொத்தி, தலைகுனிந்து நிற்பதால்தானே? இலங்கை அதிபர் ராஜபட்ச மீது சர்வதேச விசாரணை வேண்டும் என்று களத்தில் இறங்கிப் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் சம்பந்தப்பட்ட வேறு விசாரணை நடந்து கொண்டிருக்கிறதே, இவர்கள் அதைப்பற்றித்தானே கவலைப்படுவார்கள்.

இவர்களே குற்றவாளிகளாக இருக்கிறபோது யாரைப் போர்க் குற்றவாளியாக்குவதற்காகப் போராடுவது?

Wednesday, April 27, 2011

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று சொன்னால் இதுவரையிலும் இப்போதும் தமிழ்நாட்டைத் தமிழர்கள் ஆளவில்லையா?
இல்லை.
இல்லையா? என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?
ஆம்.  சாளுக்கிய அரசனான முதலாம் குலோத்துங்கச் சோழன் முதல் தமிழர்கள் தமிழரல்லாத வேற்றவர்களால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாக ஆளப்பட்டு வருகிறார்கள்.
வேற்றவர்களால் ஆளப்பட்டால் என்ன?
ஆளப்பட்ட வேற்றவர்களால் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, அழியும் நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
அப்படி என்ன மோசமான நிலையை அடைந்துவிட்டோம் என்று சொல்கிறீர்கள்?
ஒன்றா இரண்டா, இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலை, இன்றும் அங்குள்ள தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் நிலை, தமிழக மீனவர்கள் வேட்டையாடப்படும் கொடுமை, தமிழ் அருச்சகர்கள் கருவறைக்குள் நுழைய முடியாத அவலம் என நீண்ட பட்டியலே சொல்லலாம்.  நம்முடைய நிலை எப்படி இருக்கிறது என்பதை http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14168:q-&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 என்னும் இணைப்பில் தமிழ் இனம், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகிய தலைப்புகளில்   படித்துப் பாருங்கள்;  உண்மை விளங்கும்.
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்!  அதற்காகத் தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்வதா?  நல்லவர் ஆள வேண்டும் என்று சொல்லுங்கள். அதை விடுத்துத் தமிழரே ஆள வேண்டும் என்று சொல்வது இன வேற்றுமை போல் அல்லவா இருக்கிறது?
நல்லவரே ஆள வேண்டும் என்று சொல்லும் நாம் ஏன் வெள்ளையர்களை நாட்டை விட்டுத் துரத்தினோம்?  நல்லவர்கள் தாம் நாட்டை ஆள வேண்டும் என்றால் வெள்ளையர்களில் நல்லவர் ஒருவர் கூட இல்லையா?  நம்மை நாமே ஆள வேண்டும்;  அப்போது தான் நம்முடைய இனமும் மொழியும் பண்பாடும் காக்கப்படும் என்னும் நேர்ச்சிந்தனை தானே இந்திய விடுதலைப்போராட்டத்தின் அடிப்படையாக அமைந்தது.
வெள்ளையர்கள் வேற்றினத்தார்!  அதனால் அவர்களை எதிர்த்துப் போராடினோம்.  ஆனால் இங்கு தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன பேசுவோர் ‘மதராசு மாகாணமாக’ இருந்த போது நம்முடன் இருந்தவர்கள் இல்லையா?
நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வோம்.  ‘மதராசு மாகாணத்தை’ச் சேர்ந்த நம்முடன் இருந்தவர்கள் பிறகு ஏன் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடினார்கள்?  நம்முடனே இருந்திருக்கலாமே!  தமிழர்கள் ஒன்றும் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடவில்லை.  நம்முடன் இருந்த பிறமொழிக்காரர்கள் தாம் மொழிவழி மாநிலம் கேட்டுப் போராடினார்கள்.  அவர்களுடைய போராட்டம் சரியானது என்று நாம் ஏற்றுக்கொள்கிறோம்.  அப்படியானால் தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று சொல்லும் நம்முடைய கருத்தும் சரியானது தானே!
நீங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக ஒன்றும் பேசவில்லையே!
இல்லை.  ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் நாம், தமிழர் அல்லாதவர்களை வெறுக்க வேண்டிய தேவை இல்லை.  தமிழ் இனத்தின் பாதுகாப்பை முன்னிட்டு தமிழரல்லாதவர் தமிழ் நாட்டில் வாழலாம்;  ஆனால் தமிழனை ஆள நினைக்கக்கூடாது;  அந்தந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றேயாகும்.  இந்த உணர்வை மற்றவர்கள் மதிக்க வேண்டும்.  அவ்வாறு மதிக்கும்பொழுது மட்டுமே இந்திய ஒற்றுமையுணர்வு நிலை நிற்கும்.
என்னுடைய தோழி ஒருத்தி வீட்டில் மட்டும் தெலுங்கு பேசுபவள்.  ஆனால் அவள் தன்னை ஒரு தமிழச்சியாகவே முன்னிறுத்துபவள்.  அவளைத் தமிழச்சி என்று சொல்வதா?  தெலுங்கு என்று ஒதுக்கி விடுவதா?
நீங்களே சொல்கிறீர்கள் – அவர் தெலுங்கு பேசுபவர் என்று!  பின்னர் அவரைத் தெலுங்கர் என்று தானே சொல்ல முடியும்.  அதே சமயம் ‘தெலுங்கு என்று ஒதுக்கிவிடச் சொல்லவில்லை’.  அவருடைய அடையாளம் தெலுங்கு அவ்வளவுதான்!  பிற இனத்தாரிடம் வேறுபாட்டையும் வெறுப்பையும் காட்டி ஒதுக்குவது என்பது  தமிழ்ப்பண்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்குப் போராடிய தலைவர்களிலேயே பெரியார் போன்ற சிலரது தாய்மொழி தமிழ் இல்லை.  அதற்காக அவர்களை ஒதுக்கி வைக்கச் சொல்கிறீர்களா?
தந்தை பெரியார் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழர்களை மீட்டெடுக்க வந்த ஒரு விடிவெள்ளி!  அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.  அடிமைகளாக இருந்த தமிழர்களுக்குத் தன்மான உணர்வு ஊட்டியவர் அவர்.  பெரியார் தமிழர்களுக்குத் தன்மானம் ஊட்டிட இயக்கம் கண்டு செயல்பட்டாரே தவிர ஆட்சியைப் பிடித்து ஆள வேண்டும் என்று நினைக்கவில்லை.  அதனால் தான் அவரைப் பெரியார் என்று அழைத்து மகிழ்ந்தோம்.
தந்தை பெரியாரைப் போல் இல்லாமல், தமிழர்கள் நலன் என்பதைப் புறந்தள்ளி ஆட்சியைப் பிடிக்கும் ஆசையை முன்னிறுத்துபவர்கள் தமிழர்களை ஆளக்கூடாது என்று தான் சொல்கிறோம்.
எதை வைத்துத் தமிழர் என்று வரையறுப்பது?
ஒருவர் ஆங்கிலேயர் என்றும் இத்தாலியர் என்றும் எதை வைத்து வரையறுக்கிறீர்கள்?  அதே வரையறை தான் தமிழர் என்பதற்கும் பொருந்தும்!   இங்குள்ள தமிழர்கள் சிறப்பாக ஆங்கிலம் பேசினால் ஆங்கிலேயர் ஆகிவிடுவார்களா என்ன?
கருணாநிதி, செயலலிதா, விசயகாந்து ஆகிய மூவரும் வேற்றுமொழிக்காரர்கள் என்று சொல்கிறீர்கள்.  ஆனால் கருணாநிதியின் சொந்த ஊர் திருக்குவளை என்று சொல்கிறார்கள்.  இதை எப்படி அணுகுவது?
உங்கள் குடும்பத்தில் ஒருவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு வெளிநாட்டில் குடியேறி விட்டார்.  இப்போது அவருடைய வழியில் வருபவர்களை ‘இந்திய வம்சாவழி’ என்று தானே சொல்கிறார்கள்.  நீங்களும் அவர்களை உறவினர்கள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் அல்லவா?  அதே போல் தான் இங்கு வந்து பல ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறினாலும் அவர்களுடைய அடையாளம் எதுவோ அதை வைத்துத் தான் நாமும் சொல்கிறோம்.
மராட்டியத்தில் இருந்து தமிழர்கள் அடித்துத் துரத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த பால் தாக்கரேவை ‘இன வெறி பிடித்தவர்’ என்று சொல்லும் நாம் இப்படித் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்வது சரியாகப்படுகிறதா?
பால் தாக்கரே போன்றவர்கள் மராட்டியர்களைத் தவிர வேற்றினத்தார் மராட்டியத்தில் வாழவே கூடாது என்று கூறுகிறார்கள்.  அதை ‘இன வெறி’ என்று தான் சொல்ல முடியும்; சொல்ல வேண்டும்.  ஆனால் நம்முடைய போராட்டம் அதுவன்று!  வேற்றுமொழிக்காரர்கள் இங்கு வந்து வாழவே கூடாது என்று நாம் எப்போதும் சொல்வதில்லை; அப்படிச் சொல்வது சரியுமில்லை.  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று நமக்குச் சொல்லிக்கொடுத்தது தமிழ் என்பதை மறந்து விடாதீர்கள்.  தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்ப்பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகியன முன் எப்போதும் இல்லாத அளவு நசுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன;  இவை அனைத்தும் மீட்டெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.  ஒட்டுமொத்தமாகத் ‘தமிழ்’ என்னும் அடையாளத்தையே அழித்து விடும் சூழ்ச்சி நடைபெற்று வரும் காலம் இது!  இப்படிப்பட்ட சூழலில் இவற்றை எல்லாம் உணர்ந்து அச்சூழ்ச்சியை முறியடிக்கும் பாதுகாப்புக் கேடயமாகத் தான் நாம் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்கிறோம்.  யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வாழட்டும்!  ஆனால் தமிழ்நாட்டைத் தமிழர் ஆளட்டும் என்பது தான் நம்முடைய நிலைப்பாடு ஆகும்.
ஓர் எடுத்துக்காட்டுக்குக் கேட்கிறேன்.  இப்போது ஆந்திரத்தில் தமிழர்கள் இருவரை அமைச்சராக்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.  அப்போது என்ன செய்வீர்கள்?
ஒன்றும் சிக்கல் இல்லை. நாமும் ஆந்திரத்தைச் சேர்ந்த இருவர் இங்கு அமைச்சராக்கப்படலாம் என்பதை வரவேற்போம்.  இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களில் தமிழர்கள் எத்தனை பேர் அமைச்சராக்கப்பட்டிருக்கின்றார்களோ அத்தனை பேர் அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள் தமிழ் நாட்டில் அமைச்சராக்கப்படலாம் என்னும் கருத்தையும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.
இலங்கையில் பெரும்பான்மைச் சிங்களர்களை எதிர்த்துத் தனிநாடு கேட்டுப் போராடுகிற நாம் இங்கு பெரும்பான்மையாக இருக்கின்ற தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்வது சரியாகுமா?
இலங்கையில் தமிழர்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுத்திருந்தால் தனிநாடு கேட்கும் போராட்டமே வந்திருக்காது.  அடிப்படை மனித உரிமைகளைக் கூட நசுக்கியதால் தானே தந்தை செல்வா காலத்தில் தொடங்கிய அறவழிப் போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறும் அளவு நிலை வந்தது!  இங்கு நாம் எம்மொழிக்காரர்களின் வாழ்வுரிமையையும் பறிக்கப்போவதில்லை;  தமிழகத்தில் வாழலாம்; ஆள வேண்டாம் என்பது தான் நம்முடைய வேண்டுகோள் ஆகும்.
இன்னும் சொல்லப் போனால், தாய்த் தமிழகம் தலை நிமிர்ந்து நின்றால் தான் இலங்கைத் தமிழினம் உட்பட உலகத் தமிழினத்துக்குப் பாதுகாப்பாகத் தமிழகம் விளங்கும்.  தாய்த் தமிழகம் வேற்றவரிடம் அடிமைப்பட்டுக் கிடக்குமானால், உலகத் தமிழ் இனம் முழுவதும் கேட்பாரற்று நசுங்கி அழியும் நிலையை அடையும்.  அத்துடன் இலங்கையில் இனித் தமிழ் இனமும் சிங்கள இனமும் இணைந்து வாழ்தல் இயலாது.  அடிமைப்பட்டு வாழ விரும்பாத தமிழர்கள் அழிக்கப்படுவது இயல்பு.  இதனால் இலங்கையின் நிலையான அமைதிக்குத் தமிழ் ஈழம் தவிர வேறு வழியில்லை.
விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்திற்காகப் போராடினார்கள்; வெற்றி பெற இயலவில்லை.  இனித் தாய்த் தமிழகத்தின் துணை இல்லாமல் தமிழ் ஈழம் மலர முடியாது.
ஒருபக்கம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று பேசிக்கொண்டு இன்னொரு பக்கம் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்வது முரண் போலத் தோன்றுகிறதே?
நம்முடைய குடும்பத்தின் தலைவராக நாம் தாமே இருக்க முடியும்!  வருகின்ற உறவினர்களுக்கு உரிய மதிப்புக் கொடுத்துத் தங்க வைப்போம்;  அதற்காகக் குடும்பத்தலைவராகவா ஆக்க முடியும்?
இப்போது இந்தக் கருத்தை முன்னெடுப்பதன் நோக்கம் என்ன?
எப்படி ஒடுக்கப்படுகிறார்களோ அவ்வகையில் தான் மக்கள் ஒடுக்கத்திற்கு எதிராக அணி திரள்வார்கள்.  நாம் அனைவரும் தமிழினம் என்பதால் தான் ஒடுக்கப்படுகிறோம்.  எனவே தமிழர்களாக அணி திரள்வது என்பது தான் இயல்பானது.  அப்படி அணி திரண்டு போராடுவதற்கு நம்முடைய இனத்தைச் சார்ந்த ஒருவர் நம்முடைய தலைவராக வருவது தான் பொருத்தமாக இருக்கும். அப்போது தான் தமிழர் என்னும் காரணத்திற்காக மீனவர்கள் கொல்லப்படுவது, அரசிடம் உரிய பயிற்சி பெற்ற அருச்சகர்கள், தமிழர் என்னும் காரணத்திற்காகக் கோவில் கருவறைக்குள் கால் வைக்கத் தகுதியில்லாதவர்கள் என்னும் நிலை இருப்பது போன்ற பல கொடுமைகள் மறையும்; அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம், தமிழர் ஆன்மவியல் ஆகியன அழியாமல் பாதுகாக்கப்படும்.  எனவே தான் ‘தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்’ என்று சொல்கிறோம்.

Tuesday, April 26, 2011

தேவேந்திரகுல பெருந்தலைவர் மாவீரர் பாலசுந்தரராசு அவர்களின் 60 ஆம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கம்

தலைவர் என்று மதிப்போடு தேவேந்திரகுலப் பெருமக்களால் இன்றுவரை அழைக்கப் பெறுகின்ற மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 4 -7 -1929  அன்று தெய்வேந்திரகுல வேளாளர் மகாசன சங்கத்தைத் தொடங்கினார் .1936 ஆம் ஆண்டில் சித்திரை முழு நிலவு நாளில் கோட்டூரில் இச்சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார் . 3 -8 -1936  அன்று தேவாரத்திலும் 29 -12 -1946  அன்று மதுரையிலும் தேவேந்திரகுல மக்களின் முன்னேற்றத்திற்க்காக மாநாடு நடத்தினார் .1938 ஆம் ஆண்டு மண்ணின் மக்களை அடிமை நிலைக்கு பதப்படுத்தும் அரிசன சேவா சங்கத்திற்கு எதிராக போர்க்கொடி ....1939 ஆம் ஆண்டில் நடந்த மீனாட்சியம்மன் கோயில் நுழைவு போராட்டம் என்னும் பிராமணிய பித்தலாட்ட நாடக அரங்கேற்றத்திற்கு ஆதரவு மறுப்பு .....என்று தலைவர் பாலசுந்தரராசு அவர்களின் சமூக அரசியல் பயணம் தேவேந்திரகுல மக்களை முன்னேற்றப் பாதையை நோக்கி அணிதிரட்டியது
.
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை அடையாளப்படுத்தும் வகையில் இம்மக்களின் குலத்தொழிலான போர்த்தொழிலின் அடையாளமாக "சிவப்பும் " பயிர்த்தொழிலின் அடையாளமாக "பச்சையும் "என "சிவப்பு பச்சை "வண்ணக் கொடியினை தலைவர் பாலசுந்தரராசு அவர்கள் உருவாக்கினார் .அந்தக் கொடியையே இன்றும் தேவேந்திரகுல மக்களின் சமூகக் கொடியாக பயன்படுத்தப்பட்டுவருகிறது .

தேவேந்திரகுல மக்களின் உரிமைக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடாற்றிய தலைவர் மாவீரர் பாலசுந்தரராசு அவர்கள் 11 -05 -1951  அன்று இயற்கை எய்தினார் .அவர் மறைந்து 57 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் மள்ளர் மீட்புக் களம் தலைவர் பாலசுண்டரராசு அவர்களின் நினைவகத்தை எடுத்துக்கட்டி, தலைவர் குறித்து வரலாற்று நூலையும் வெளியிட்டுள்ளது .தற்போது தலைவர் பாலசுந்தரராசுவுக்கு சிலை அமைக்கும் பணியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .தலைவர் பாலசுந்தரராசுவின் நினைவகத்தை கட்டி எழுப்பி விழா காண்பதற்கு தேனிமாவட்டத்திலும் தேக்கம்பட்டியிலும் தங்கியிருந்து களப்பணி ஆற்றிய மள்ளர் மீட்புக் களத்தின் தலைவர் செந்தில் மள்ளர் அவர்களையும் அவரோடு உருதுனையாற்றிய மள்ளர் மீட்புக் கள பொறுப்பாளர்களான  பாசுக்கரசோழன், மா .வீரபாண்டியன் , செ.குமரமள்ளர் , தமிழ்வேந்தன் , கந்தசாமி , பெருமாள் தேவேந்திரன் , வேல்முருகன் ,உள்ளிட்டோரை இங்ஙனம் நினைவு கூறவேண்டியது. 

வருகிற மே 11 அன்று தேக்கம்பட்டியில் தலைவர் பாலசுந்தரராசு  அவர்களின் 60 ஆம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்விற்கு மள்ளர் மீட்புக் களத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்துவருகின்றனர் . ஆகவே தேவேந்திரகுல உறவுகள் தலைவரின் நினைவிடத்தை நோக்கி வீரவணக்கம் செலுத்த வருமாறு  மள்ளர் மீட்புக் களத்தின் தேனி மாவட்ட தலைவர் கோகிலா க.முருகேசன்  (9788678638 ) மாவட்டச் செயலாளர் அ.துக்கமுத்து (9842488343 ) ஆகியோர் கூட்டாக அழைப்புவிடுத்துள்ளனர் .

Monday, April 11, 2011

ஆள் காட்டி விரல் தான் ஆயுதம்

ஆள்  காட்டி விரல் தான் ஆயுதம் 

உள்ளங்  கையை 
உயர்த்திக்காட்டி
ஒட்டு பிச்சைப்கேட்கிறான் 
காங்கிரஸ்காரன்.

அடையாளம் தெரிகிறதா 
அந்த கையை 

கொந்து குண்டுகளால் 
நம் இனத்தை 
கொன்று குவித்தவனை
தட்டி கொடுத்த கை

உரிமையை கேட்டவனை  
உணர்வோடு இருத்தவனை
உருக்குலைத்து போட்டவனுடன் 
உறவாடும் கை.

தந்தையர்  பூமி என்று
தஞ்சம் புகுத்த்வனை
அகதி என சொல்லி
அலையை விட்ட கை.

மருத்தவம் வேண்டி வந்த மாதாயை  
மனித உணர்வு ஏதும் இன்றி
திருப்பி  அனுப்பிய கை.

கட்சதீவினை  
கைமாற்றி  விட்ட கை.

மினவர் தமிழனை
காப்பற்ற துப்பின்றி
கையை விரித்த கை.

தமிழர்களின்  
ஆயுள் ரேகையை
அழித்த கை.

அடையலாம் தெரிகிறதா
அந்த கையை.

கணக்கை
நேர் செய்வோம்.

ஆள் காட்டி விரல்தான்
ஆயுதம்

கைக்கு எதிரான
வலுவான கரத்தை
வலுவாக்கு
அதை
நிச்சயம் செய்யும்
உன் வாக்கு.

ஆள் காட்டி விரல் தான்
ஆயுதம்.

கையால் ஆகாத கையை ?
காரி துப்பு.....

காங்கிரசு

காங்கிரசு



இனப்படுகொலையின்
மறுபெயர்
களவாணிகளின்
உறைவிடம்
கதரில் காவி பூண்ட
கருங்காலிகள்
காட்டிகொடுப்பதை
கண்ணும் கருத்துமாய் செய்யும்
கண‌வான்கள்


போப்பர்சு, ஸ்பெக்ட்ரம்
இஸ்ரோ என்று இவர்கள்
கைபையை நிறைத்தது
எத்தனை எத்தனை?


காலிஸ்தான், ஈழம்,
காசுமீரென்று இவர்கள்
கையில் படிந்த
இரத்த கறை
எத்தனை எத்தனை?


பகத்சிங், அம்பேத்கர்
என்று இவர்களால்
கழுத்தறுபட்டவர்கள்
எத்தனைபேர்?



ஆண்டாண்டாய் நம்மை
ஆண்டுவிட்டான்
அடிமையாய் நம்மை
ஆக்கிவிட்டான்


உயிர் காக்கும்
மருத்துவத்தை
வியாபாரம்
ஆக்கிவிட்டான்


கண் திறக்கும்
கல்விதனை
களவாணிகளிடம்
காவு தந்தான்
ஊரையே விற்று
உலை வைத்தான்
அணு உலை தனை
திறந்து வைத்தான்


விளைநிலம் தனையும்
விழ‌லாய் மாற்றி
சந்தைக்கு அனுப்பிவிட்டான்
மக்களை கொல்லும்
இரசாயன ஆலைகள்
ஊருக்கொன்றாய்
திறந்து வைத்தான்


ஏழைகள் குடிலெறித்தான்
ஏளனம் அதை செய்தான்
ஏரி குளத்திலெல்லாம்
ஏற்றிவிட்டான் கட்டிடத்தை


கடல்கொண்ட மீனவனை
கண்ணெதிரேச் சுட்டு கொல்ல
கள்ள‌ மவுனம் கொண்டு
கழிப்புடன் அதை ரசித்து
சிங்கள காடையருடன்
கொஞ்சி குலாவி வந்தான்


கருவினில் சிசுவழித்தான்
கன‌வுகள் தனை அழித்தான்
இனவெறி அரசுடன்
இன்புற்று உறவு கொண்டு
ஈழத்தில் எம்
இனம் அழித்தான்


இவன் தந்த ஆயுதம்
என் சொந்தத்தை
மட்டுமா கொன்றது
எனக்கும் இவனுக்கும்
இருந்த பந்தத்தையும்
சேர்த்தே தான் கொன்றது


வேரறுக்க வேண்டிய நாள்
வெகு விரைவில்
வெகுண்டெழுவோம்
மண் காக்க.......

Tuesday, March 1, 2011

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 13 இல் தேர்தல்

தமிழக சட்டப் பேரவைக்கு ஏப்ரல் 13 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறம் என்று, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  இந்த அறிவிப்பை ஒட்டி தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து, மே 13 அன்று நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.   தேர்தலுக்கான அறிவிப்பு 19.03.2011 அன்று வெளியிடப்படும்.   வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி, 26.03.2011.  வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப் படும் நாள் 28.03.2011.  வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 30.03.2011. வாக்கு எண்ணிக்கை 13.05.2011.

தேர்தல் நடைமுறைகள் 16.05.2011க்கு முன்பு முடிவுக்கு வரும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

ஸ்டாலின் சந்தித்த அடிமைகள்

இன்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தளபதி என்றவுடன் எந்தப் போரில் சண்டையிட்டு வெற்றி பெற்றார் என்று  அதிகப் பிரசங்கித் தனமாக கேட்காதீர்கள்.  தன்னுடைய அண்ணன் அஞ்சாநெஞ்சனோடு போடும் சண்டையை விடவா பெரிய சண்டை வேண்டும் ? அப்படிப் பட்ட வீரத் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிறந்த நாள்.   இது தமிழக வரலாற்றில் பொன்னாள் அல்லவா ?  அந்தப் பொன்னாளில், அடிமைகள் சென்று சந்தித்து, தளபதிக்கு வாழ்த்துச் சொல்வதை விட வேறு என்ன வேலை ?  ஒரு வேளை, மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் ?  எதற்கும் இருக்கட்டுமே.... ?
இந்த மலர்கொத்துக்களுக்கான பணத்தை தங்கள் சொந்த பாக்கெட்டிலிருந்து வாங்கியிருப்பார்கள் என்று மட்டும் தவறாக நினைத்து விடாதீர்கள்.   அவ்வளவு சூடு சொரணையெல்லாம் இந்த அதிகாரிகளுக்கு இல்லை.   அதற்காகத் தான் எப்போதும் இருக்கிறதே... "ரகசிய நிதி"
இதோ அந்த அடிமைகள்.
RMK_1693_copy

RMK_1679_copy
RMK_1686_copy
RMK_1687_copy
RMK_1688_copy
RMK_1694_copy

RMK_1695_copy
RMK_1697_copy
RMK_1699_copy
RMK_1701_copy

RMK_1691_copy
எத்தனையோ பேர் போட்டோக்கு போஸ் குடுத்தாலும், ஒட்டக் கூத்தர் இஷ்டைலே தனி பாஸு.   ட்ரெஸ்ஸெல்லாம் இஷ்டைலாத் தான் பண்றாரு....   பைவ் ஸ்டார் ஓட்டலுக்கு போனாத்தான் ஓசில துண்றாரு....  இன்னா பண்றது....  ?

Monday, February 28, 2011

பா‌ர்வ‌தியம்மாவின் அஸ்தியை நாசப்படுத்தியமையை கண்டித்து போராட்டம்!ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு! - வைகோ, நெடுமாறன், பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் கைது

செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள இல‌ங்கை‌த் துணை‌த் தூதரக‌த்தை அக‌ற்ற‌க் கோ‌ரி இன்று போரா‌ட்ட‌த்‌தி‌‌ல் ஈடுப‌ட்ட ம‌.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க‌த்த‌ி‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் உ‌ள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அவமதிப்பு செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,
அன்னை பார்வதியம்மாள் சடலத்தை அவ திப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயலுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்.
முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயை அணைக்க கூடாது தொடர்ந்து அதே வேகத்தில் செயல்பட வேண்டும் பார்வதியம்மாள் சிதையை அவமதிப்பு செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஆவேசமானார்.
அதைத்தொடர்ந்து பழ.நெடுமாறன் பேசும்போது,   மனித நேயம் ஈவு இரக்கம் இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சே இது போன்ற கொடூர செயலை செய்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் உதவியால் இது போன்ற இழிவான செயலை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கையை ஆதரித்து காங்கிரஸ் அரசு செய்து வரும் தவறை உணரும் காலம் விரைவில் வரும். இந்த கரையை துடைப்பதற்கு நம்மால் முடிந்ததை செய்வோம். இலங்கை தூதரகத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் கொடியை தீவைத்து எரித்தார்கள். பின்னர் அணி அணியாக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இ‌ந்த அ‌ற‌ப்போர‌ா‌ட்ட‌‌ப் பேர‌ணி‌யி‌ல் ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ உ‌ள்ள த‌மி‌ழ் உண‌ர்வாள‌ர்க‌ள் ஏராளமானோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.
செ‌ன்னை ஆ‌ழ்வா‌ர்‌ப்பே‌ட்டை‌யி‌ல் உ‌ள்ள இல‌ங்கை துணை தூதரக‌த்தை பேர‌ணி நெரு‌ங்குவ‌‌ற்கு மு‌ன்பு அவ‌ர்க‌ள் அனைவரையு‌ம் பொலிஸார் கைது செ‌ய்தன‌ர்.
வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், மகேந்திரன், மற்றும் புதிய பார்வை நடராஜன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தி மு க அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் நடிகர் விஜயகாந்த் அறிக்கை

தமிழகத்தில் திமுக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
2ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்பதும் உண்மை விவரங்களாக வெளி வந்துள்ளன. மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்டெல் கம்பெனி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.விக்கு வந்துள்ளது என்று தெரிகிறது.எவ்வாறு மத்திய அமைச்சர் பதவியில் இருந்தால் விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்று, முன்னாள் அமைச்சர் ராஜா விலக வேண்டும் என்று நாடாளுமன்றமே வற்புறுத்தியதன் பேரில் அவர் விலக நேர்ந்ததோ, அதே போல கருணாநிதி மாநில அரசின் முதல்வராக  இருப்பதனாலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற முக்கிய கட்சியின் தலைவராக இருப்பதனாலும், முறையான விசாரணை நடைபெறாமல் இடையூறுகள் நேர்வதற்கும், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படும். எனவே, முதல்வர் கருணாநிதி பதவி விலக வேண்டும்.   
சி.பி.ஐ. விசாரணை முறையாக நடைபெறவும், எவ்வித குறுக்கீடும் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே வழி வகுக்கும். அவர் பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு தி.மு.க. அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர்.
 தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை. இன்னும் சொல்லப் போனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் எந்த நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
  
மேலும் தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் கமிஷனுக்கும் இது உகந்ததாக இருக்கும்.
 தி.மு.க. அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும் என்றே கருதுகிறேன். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களில் கடைப்பிடித்த அராஜகங்களையும், பின்னர் இடைத் தேர்தல்களில் கையாண்ட ஊழல் போக்குகளையும் அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள். ஆகவே, உடனடியாக தி.மு.க. அரசை பதவி நீக்கம் செய்து நேர்மையான தேர்தல்கள் நடைபெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் கூறியுள்ளார்.